பொறியியல் தரவரிசையில் திருச்செந்தூர் ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா பொறியியல் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த கல்வியாண்டில் இப்பள்ளி மாணவி பா.நேத்ரா 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட பொறியியல் தரவரிசையில் மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு பள்ளி தாளாளர் அ.ராமமூர்த்தி, முதன்மை முதல்வர் இரா.செல்வ வைஷ்ணவி, முதல்வர் ஜீனத் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


