ஒரு கோடி பனை (மரங்களை வளர்க்க) விதைகள் விதைக்கப்பட்டு வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட உதயமான 36 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாவட்ட வன அதிகாரி அபிஷே தோமர் இ வ ப அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கி செந்தில்ராஜ் இ ஆ ப அவர்கள் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டு ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை விதைக்கப்பட்ட இடத்தில் 100 சதவீதம் பனை மரக் கன்றுகள் வளர்ந்து வருகிறது. வளர்ச்சியை தடுக்கும் வகையில் அப்புறப்படுத்தப் பட்ட சீமை கருவேல மரங்கள் மீண்டும் அதே இடத்தில் மிக அடர்த்தியாக வளர்ந்து வருகிறது இந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் திரு .உதயகுமார் திரு காயல் பாலா மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்


