தூத்துக்குடியில் மருது வளரி பூமாரங் விளையாட்டு அமைப்பு, தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழகம் ஆகியவை சாா்பில் தருவை மைதானத்தில் வளரி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பற்சி முகாமுக்கு, மருது வளரி பூமாரங் விளையாட்டு அமைப்பு நிறுவனா் மாஸ்டா் காா்த்திக்ராஜா தலைமை வகித்து கூறுகையில், வருகின்ற 2024 ஆம் ஆண்டு போா்ச்சுக்கலில் நடைபெறும் உலக வளரி போட்டிக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு நடைபெறுகிறது.
இதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தோ்வு செய்யப்படுவா் என்றாா். இதில், தொழிலதிபா் பொன்குமரன், தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழக நிறுவனா் அருள் அந்தோணி, சகா கலைக்குழு சங்கா், கராத்தே மாஸ்டா் பாட்ஷா, மாவட்ட மருது வளரி சங்கத் தலைவா் வசந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.


