பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் புதிய ஸ்மார்ட் வகுப்பறையை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் ஊராட்சி, பனையூர் கிராமம் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் ஊர் நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக ரூ.1.10-லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் வகுப்பறையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்து அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளியின் வளர்ச்சி பணிக்காக ரூ.25000-நிதி உதவி வழங்கினார்கள்.
நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து பள்ளி தலைமை ஆசிரியை மரிய அனிதா, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி, மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், இந்து நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் ஆதிமாரீஸ்வரன், பள்ளி சங்கத் தலைவர் மாரிச்செல்வம் உட்பட ஆசிரியர் -ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


