வல்லநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது வளரும் தலைமுறைக்கு வலிமை தரும் யோகா என்ற தலைப்பில் சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் உரையாற்றினார், யோகா உடலை பலப்படுத்தி மனச்சோர்வு,மன அழுத்தம் முதலிய மனசிக்கல்களிலிருந்து விடுபட பெரும் துணையாக இருக்கும் என்றும் மாணவ மாணவியர் மனதை ஒருமுகப்படுத்தி தேர்வில் பெரும் வெற்றிகள் பெற தினமும் யோகப் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார், அனைவருக்கும் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய யோகா பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டது, நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் டிலைட் தலைமை தாங்கினார் , ஆசிரியைகள் அகிலா, ஜெயந்தி கலந்து கொண்டனர் ,முடிவில் மருந்தாளுனர் வெங்கடேசன் நன்றி கூறினார்


