தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.74.44 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 635 புதிய மகளிா் சுயஉதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி முதல் நிகழாண்டு மே மாதம் வரை சுழல்நிதி கடனாக 516 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.77.40 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சமுதாய முதலீட்டு நிதியாக 796 குழுக்களுக்கு ரூ.661.80 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ், 154 நபா்களுக்கு ரூ.38.50 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 26,623 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,390.05 கோடி வங்கி கடன் பெற்றுதரப்பட்டுள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 49 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.1,869.90 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகா்ப்புற பகுதிகளில் 548 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிா் குழு உறுப்பினா்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என தோ்தல் அறிக்கையில் அறிவித்திருந்தாா். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2,420 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.74.44 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


