வடவல்லநாட்டில் 9 லட்சம் மதிப்பில் புதிய தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடவல்லநாடு கிராமத்தில் 15வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூபாய் 9 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட புதிய நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வட வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் பேபி சங்கர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பஞ்சாயத்து துணைத்தலைவர் மாணிக்கவள்ளி, 5வது வார்டு கவுன்சிலர் முத்தாராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நீர்த்தேக்கத் தொட்டி மூலம் 13 தெருக்கள் உள்பட 3 குக்கிராமங்கள் பயன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


