தூத்துக்குடி மாவட்டத்தில் 3 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 13 தனிப்பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, விளாத்திகுளம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சேகர் தருவைகுளம் காவல் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரகு, திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி ரூரல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசங்கர் தென்பாகம் காவல் நிலயத்திற்கும், தென்பாகம் தனிப்பிரிவு காவலர் மாரிக்குமார் தென்பாகம் காவல் நிலையத்திற்கும், புதுக்கோட்டை தனிப்பிரிவு காவலர் சாமிக்கண்ணு தட்டபாறை காவல் நிலையத்திற்கும்
எப்போதும்வென்றான் காவலர் செல்வகுமார் பசுவந்தனை தனிப் பிரிற்கும், பசுவந்தனை காவலர் கணபதி எப்போதும்வென்றான் தனிப் பிரிவிற்கும், கடம்பூர் காவலர் சந்தோஷ் செல்வம் புதுக்கோட்டை தனிப்பிரிவிற்கும், சாயர்புரம் காவலர் மைக்கேல்ராஜ் கடம்பூர் தனிப்பிரிவிற்கும், விளாத்திக்குளம் காவலர் ஜெயசந்திரன் புதூர் தனிப்பிரிவிற்கும், புதூர் காவலர் நாகார்ஜுனன் மாசார்பட்டி தனிப்பிரிவிற்கும், செய்துங்கநல்லூர் காவலர் ராஜேஷ் சேரகுளம் தனிப்பிரிவிற்கும், சேரகுளம் காவலர் சங்கரசுப்பு செய்துங்கநல்லூர் தனிப் பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


