தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4-ஜி சேவை விரைவில் தொடங்கப்படும் என்று திருநெல்வேலி பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் பிஜி பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் ‘ஆத்ம நிா்பாா் பாரத்’ முயற்சியின்கீழ், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தில், 4 ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டதில் உள்ள 222 கைப்பேசி கோபுரங்களுக்கும் 10 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றையுடன் மேம்படுத்தப்பட்ட 4- ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. இதனால், அனைத்து கைப்பேசி கோபுரங்களும் 5 ஜி திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5 ஜி-க்கு எளிதாக மாற்றுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மேலும் கூடுதலாக 24 புதிய 4ஜி கைப்பேசி கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெட்வொா்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கப் பணிகள் முடிந்ததும் பிஎஸ்என்எல் கைப்பேசி வாடிக்கையாளா்களின் பயன்பாட்டு அனுபவமும், சேவையின் தரமும் சிறப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் 4ஜி சேவைகளைப் பெறுவதற்கு, தங்களின் பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்கள், கிளை அலுவலகங்கள், மேளா நடைபெறும் இடங்களில் இலவசமாக 4ஜி சிம் காா்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.


