தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி இன்று ஆய்வு மேற்கொண்டு வந்திருந்த பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றார். புதிய பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழியினை பள்ளி குழந்தைகளின் முன்பு ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த மாநகராட்சி பள்ளியானது தொன்மையாள புராதான சின்னமாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதன் பழமை மாறாமல் ஏற்கனவே பள்ளி குழந்தைகள் சிரமமின்றி கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே மேயர் அவர்கள் ஆய்வு செய்து சரி செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்ட கழக செயலாளருமான ரவீந்திரன் மற்றும் ஜேஸ்பர் ஞான மார்ட்டின் ஆகியோர் உடனிருந்தனர்


