முள்ளும் மலரும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப் பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா ஆகியோர் நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.
செந்தாழம் பூவில வந்தாடும் தென்றல், அடி பெண்ணே பொன்னூஞ்சல், இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாடலும், நித்தம் நித்தம் நெல்லுச்சோறு போன்ற அருமையான பாடல்களை கொண்ட இந்த படம் பிரபலமாக பேசப்பட்டது.
இந்த படத்துக்கு மூலக்கதை எழுதியவர் தாமிரபரணி கரை முன்னீர் பள்ளம் என்ற ஊரைச்சேர்ந்து உமா கல்யாணி. இவரது வரலாறு குறித்து நாம் பார்க்கலாம்.
உமாசந்திரன் . 14.-08.-1914ல் பிறந்தார். 11.-04.-1994 இல் இறந்தார். தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர். முள்ளும் மலரும் எனற இவரது புதினம் 1978ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. இவரது இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன்.
உமாசந்திரன் சொந்தவூர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீ ர்பள்ளம் ஆகும். அவ்வூரிலுள்ள சிவன் கோவிலுள்ள பூர்ணகிரு பேசுவரைப் போற்றி இவர் குடும்பத்து ஆண்கள் பெயருக்கு முன்னால் பூர்ணம் என்னும் அடைமொழியை இணைப்பது வழக்கம். இவர் தந்தை பூர்ணம் கிருபேசுவர ஐயர் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பணியாற்றியபொழுது, அங்கு 1914 ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் நாள் இவர் பிறந்தார். இவர் தாயின் பெயர் உமாபார்வதி; இவர் தம்பியர் பெயர் பூர்ணம் விசுவநாதன், பூர்ணம் சோமசுந்தரம், பூர்ணம் பால கிருட்டிணன் இவர் தம்பியர் ஆவர்
இந்த திரைப்படம் பற்றி முதலில் பார்க்கலாம். 1978ம் வருடம் வெளிவந்தது இயக்குனர் மகேந்திரன் அவர்களின் முதல் படமான முள்ளும் மலரும்.
Ôநீ நடிச்சதுலயே உனக்கு ரொம்பப் பிடிச்ச படம் எது?Õ என்று குருநாதர் கே.பாலசந்தர் கேட்க, ஒருநிமிடம் கூட யோசிக்காமல், தயங்காமல், சபை நாகரீக மென்பதையெல்லாம் பார்க்காமல், தனக்கே உரிய வேகத் துடன் ஸ்டைலாகச் சொன்னார் ரஜினி… Ôமுள்ளும் மலரும்Õ என்று. அந்த அளவுக்கு முள்ளும் மலரும் திரைப்படம் மகச்சிறப்பான படமாகும்.
முள்ளும் மலரும். அதாவது முள், மலர் என இரண்டு குணங்கள் கொண்டது என்றும் சொல்லலாம். முள்ளும் மலரும். அதாவது முள்ளானது ஒருகட்டதில் மலர்ந்து விடுகிறது என்றும் அர்த்தம்.
உமாசந்திரன் எவ்வளவு கதைகள் எழுதியிருக்கிறார் என்று நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால், முள்ளும் மலரும் கதையை நாவலாக எழுதி, அது சினிமா வாகவும் எடுக்கப்பட்டதில், அவரின் பெயரும் எழுத்து உள்ளவரையும் இருக்கும்; சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது உறுதி.
அவள் அப்படித்தான், ஆயிரம் ஜென்மங்கள், இளமை ஊஞ்ச லாடுகிறது, இறைவன் கொடுத்த வரம், என் கேள்விக்கு என்ன பதில், சங்கர் சலீம் சைமன், சதுரங்கம், தப்புத்தாளங்கள், தாய்மீது சத்தியம், ப்ரியா, பைரவி, மாங்குடி மைனர், வணக்கத்துக்குரிய காதலியே, ஜஸ்டிஸ் கோபிநாத். போதாக் குறைக்கு இன்ஸ்பெக்டர் ரஜினி, ரவுடி ரஜினி என்று மொழிமாற்றுப் படங்கள் என வரிசையாய் அந்த வருடம் ரஜினிக்கு ஏகப்பட்ட படங்கள் வந்தாலும், மகேந்திரனின் முள்ளும் மலரும். ரஜினியின் கிரீடத்தில், அழகிய இறகென சிறகாய் உட்கார்ந்துகொண்டது.
மகேந்திரன் யதார்த்த மனிதர்களின் நாயகன். அதனால்தான் அத்தனை யதார்த் தமான காளி கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் ரஜினியைத் தேர்வு செய்து, மிகச்சிறப்பாகவும் நடிக்கவும் வைத்திருப்பார்.
மைசூர் பக்கம் உள்ள அந்த லொகேஷனையும் நம்மூர்க் கோப ஈகோ பாச அன்புகளையும் மிக்ஸியில் போட்ட திரைக்கதையாய்த் தந்திருப்பதில் இருக்கிறது, மகேந் திரனுக்கும் அந்த நாவலுக்குமான பிணைப்பு. காளி நல்லவன்தான். ஆனால் அவனின் செயல்களைத் தள்ளிநின்றுப் பார்ப்பவர்களுக்கு, கெட்டவனாகத்தான் தெரிவான். சாதாரணமாகச் செய்யும் நல்ல கெட்ட விஷயங்கள் எல்லாமே அதிகாரி சரத்பாபுவுக்கு, அவ்வளவு நல்லதாகப்படவில்லை. முட்டிக் கொண்டே இருக்கிறார்கள் இருவரும்.
அங்கே, காளியும் அவனின் தங்கை வள்ளி ஷோபாவும் அப்படியரு ஒட்டுதலுடன் இருக் கிறார்கள். ஷோபாவின் பார்வையும் அந்த வெள்ளந்திக்குரலும் சிலசமயங்களில் பேசுகிற பெரியமனுஷித்தனமும் தடக்கென்று மன சோபாவில் கம்பீரமாக ஷோபாவை உட்கார வைத்துவிடுகின்றன.
படாபட் ஜெயலட்சுமி நடித்த படங்களை எப்போது பார்த்தாலும், Ôபாவி மக, இப்படி அநியாயமா சாவைத் தேர்ந்தெடுத்துப் போய்ச்சேர்ந்துட்டாளேÕ என்று துக்கம் தொண்டையை அடைக்கும். அப்படியரு நிறைவான நடிகை அவர். இங்கே, காளி, வள்ளி கதாபாத்திர ராஜாங்கத்திற்கு மத்தியிலும் தன் முத்திரையை ஆங்காங்கே, பூ தூவுவது மாதிரி தூவிச் சென்றிருப்பார். “நித்தம் நித்தம் நெல்லுச்சோறு” பாட்டுக்கு அவரின் ரியாக்ஷன் ஒவ்வொன்றும் கல்யாண சமையல் சாதம்.
மளிகைக் கடை வெண்ணிற ஆடை மூர்த்தியின் கள்ள உறவு, சாமிக்கண்ணுவின் அப்பாவித்தனம், சரத்பாபுவின் நேர்மை, அந்த மலையும் மேடுபள்ளங்களும் செடிகொடிகளும் என மிகக்குறைந்த கதாபாத்திரங்கள்தான். இவை அத்தனைக்கும் கனம் சேர்ப்பதாகவும் இலகுவாக்குவதாகவும் மென்மை கூட்டுவதாகவும் மனங்களை நம் கண்ணுக்கு எதிரே காது வழியே காட்டுவதற்காகவும் என மிகப்பெரிய பங்கைச் செலுத்தியிருக்கிறார் இளையராஜா. பாலுமகேந்திராவின் கண்களும் கேமிராவும் உள்ளதை உள்ளபடியே காட்டி, இன்னும் அழகூட்டியிருக்கும்.
“கெட்டபய சார் காளி… ரெண்டு காலு ரெண்டு கையி இல்லாட்டியும் கூட பொழச்சுக்குவான்” என்பது படம் ரீலிசான சமயத்தில் பஞ்ச் வசனமாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் படம் வெளியாகி, 40 வருடங்களான நிலையில், இன்றைக்கு இந்த வசனத்தைச் சொல்லாதவர்களே இல்லை.
(நதி வற்றாமல் ஓடும்)


