கிரண் பேடி பிறப்பு: 9 சூன் 1949) ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972 ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971 ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றார். 1993 இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடு[3] 1994 ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007 ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார்.[4] 2011 இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015 இல் இணைந்தார்.
2016 ஆம் ஆண்டு மே 29இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்று, 16 பெப்ரவரி 2021 ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.
கிரண் பேடி, நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும்[7] சிறை சீர்திருத்தங்கள், போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994ஆம் ஆண்டு இந்தியா விஷன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்.


