சாத்தான்குளத்தில் கோழி குஞ்சு பொறிப்பதற்கு இங்குபேட்டர் தயாரித்த பள்ளி மாணவன் நிவாஸை தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் நேரில் அழைத்து செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த தெற்கு ஒன்றிய திமுக செயலர் ஆ. பாலமுருகன் மகன் நிவாஸ் (15). இவர் சொந்தமாக வீட்டிலுள்ள பொருள்களை கொண்டு கோழி குஞ்சு பொறிப்பதற்கான இங்குபெட்டர் ஒன்றை தயாரித்தார். இதன்மூலம் முதற்கட்டமாக 5கோழி முட்டைகளை பொறித்து குஞ்சுகளை வெளிவந்தன. இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மாணவன் நிவாஷை பாராட்டினர். இந்நிலையில் தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாணவன், நிவாஷை செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து இங்குபேட்டர் தயாரித்த நுனுக்கத்தை கேட்டு தெரிந்து கொண்டு, பாராட்டி சிறப்பு பரிசு வழங்கினார். இன்னும் பல தயாரிப்புகளை தயாரிக்க ஊக்கம் அளித்து அதற்காக எந்த உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது அவரது தந்தையும்,, சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலர் பாலமுருகன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரனீஸ், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாநில வர்த்தக பிரிவு துணை அமைப்பாளர் உமரிசங்கர், அமைச்சர் உதவியாளர் கிருபா உள்ளிட்ட பலர் உடன்ருந்தனர்.


