ஏதோ ஒரு பத்து பேர், எதிர்ப்பு தெரிவித்ததற்காக,,, ஒட்டுமொத்த திருநெல்வேலி மாவட்டமே திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தது போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது அரிசிக்கொம்பனுடைய களக்காடு- முண்டந்துறை வருகை…
உள்ளபடியே அரிசிக்கொம்பனுக்கு ஏற்ற வனப்பகுதி களக்காடு- முண்டந்துறை வனப்பகுதிதான்…
பரந்து விரிந்து கிடக்கும் அந்த ஏகாந்த பெருவெளியில் அரிசி கொம்பன் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் சுற்றளவில் நடமாட முடியும்
ஒரு யானைகள் காப்பகத்தையே ஒரு வனப்பகுதியில் அமைக்க முடியும் என்றால் அங்கு எவ்வளவு யானைகள் இருக்க வேண்டும். வனத்துறை திட்டமிடல் எதுவும் இல்லாமல் அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தை மாஞ்சோலை வனப்பகுதியில் அமைக்கவில்லை.
மேலாக எனக்குத் தெரிந்து தமிழகத்தில் நீரூற்றுகளும், சோலைக்காடுகளும் நிறைந்த இரண்டு வனம், ஒன்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்திருக்கும் மாஞ்சோலை வனப்பகுதி. மற்றொன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா வனப்பகுதி.
தமிழகத்தில் இருக்கும் மற்ற வனப்பகுதிகள் எல்லாம் கடும் கோடை காலங்களில் நீரூற்றுகளை சுரப்பதில்லை. இதில் மேகமலை சற்று விதிவிலக்கு.
சின்னக்கானலில் இருந்த அதே வனப்பும், வளமையும் தற்போது அரிசி கொம்பன் விடப்பட்டிருக்கும் அப்பர் கோதையாறுக்கு மேலே உள்ள முத்துக்குளி வயல் பகுதியிலும் இருக்கிறது.
முத்துக்குளி வயல் பகுதியில் இருந்து அரிசி கொம்பன் மேற்கு நோக்கி நகர்ந்தால், அதிகபட்சம் 22 கிலோமீட்டரில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்முடி வந்துவிடும். தென்மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்தால் அது நெய்யாற்றின் கரை அணையை சென்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. வடமேற்கில் நகர்ந்தால் அது பாலோடு நகரத்தை அடையவும் வாய்ப்பு உண்டு.
இயல்பாகவே தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டக்கடை, நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு ஆகிய மூன்று தாலுகாக்களின் எல்லையோரங்களில் இனி அரிசிக்கொம்பன் வலம் வரலாம்.
அப்பர் கோதையாறில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணை பகுதிக்கோ அல்லது பெருஞ்சாணி அணை பகுதிக்கோ அரிசி கொம்பன் செல்வதற்கு ஒரு விழுக்காடு கூட வாய்ப்பு இல்லை. ஏனென்றால் தலைகீழ் இறக்கத்தில் யானைகள் ஒருபோதும் பரிசோதனை செய்வதில்லை.
கோதையாறுக்கு கீழே வராமல் வனத்துறை தகுந்த சோதனை சாவடிகளை அமைத்து முகாமிட்டால், கண்டிப்பாக அது தேயிலைத் தோட்டங்களுக்குள் புகுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை.
தற்போது அரிசி கொம்பன் யானை விடப்பட்டிருக்கும் இஞ்சிக்கல் வயல் பகுதி அவனுக்கு ஏற்ற சீதோஷ்ணமும் உணவும் சுற்றித் திரிய பரந்து விரிந்த இடமும் கொண்ட பகுதியாதலால் அரிசி கொம்பனின் மூர்க்கம் குறைவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
வடமேற்கு, தென்மேற்கு அல்லது மேற்கு திசை நோக்கி அரிசி கொம்பன் நகராமல் காரையாறு அணைப்பகுதிக்கு மேற்கே உள்ள அகத்தியர் கோயிலை நோக்கி வருமென்றால், அதைவிட சுகம் அதற்கு வேறொன்றுமில்லை.
வற்றாத நீரூற்றுகளைக் கொண்ட அகத்தியர் மலை வனப்பகுதி யானைகள் வாழ்வதற்கு ஏற்ற இதமான கால நிலையை கொண்ட பகுதியாகும்.
அரிசி கொம்பனை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் அன்புடன் வரவேற்கிறோம்…
எதிர்ப்பவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
நாடு தான் மனுஷனுக்கு…
காடு விலங்குகளுக்கு என்பதை மனித ஜென்மங்கள் புரிந்து கொள்ளாத வரை…
பருவ மழை ஒருபோதும் குறித்த காலத்தில் பெய்யப் போவதில்லை…
என் வழித்தடத்தில் அல்லது என்னுடைய வாழ்விடத்தில் எதற்கடா விவசாயம் செய்கிறீர்கள் என்று மொத்த யானைக் கூட்டமும் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கினால், தாங்குமா இந்த ஆறறிவு படைத்த சமுதாயம்.
அரிசிக்கொம்பன் என்பது ஒரு விலங்கல்ல…
அது ஒரு உயிர்


