பேய்குளம் அருகே மதுவை பதுக்கி வித்தவர கைது செய்து போலீசார் 96 மது
பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்
சாத்தான்குளம், பேய்குளம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல்
விலைக்கு விற்கப்படுவதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. அதன் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து
தலைமையில் போலீசார் குமார், சுந்தர் ஆகியோர் நேற்று ரோந்து பணியில்
ஈடுபட்டனர். அப்போது பேய்க்குளம் அடுத்த குருகால்பேரி பகுதியில்
போலீசை கண்டதும் அவர் வைத்திருந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு
தப்பிஒட முயன்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் அவர்
ஶ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்
மகன் வேல்முருகன்( வயது 37)என்பதும் இவர் அரசு மதுபான கடைகளில்
மதுவை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது.
அதன் பேரில் அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 96
180மி.மிஅளவுகொண்ட மது பாட்டில்களை பரிமுதல் செய்தனர்.


