தட்டார்மடத்தில் முன்னாள் தமிழக முதல்ர் கலைஞர் மு. கருணாநிதி 100வது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தட்டார்மடம் பஜாரில் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி 100 வது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய திமுக செயலர் ஆ. பாலமுருகன் தலைமை வகித்து அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழக்குழு உறுப்பினர் இந்திரகாசி, ஒன்றிய அவைத் தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள்சித்திரை,சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய பிரதிநிதி முருகேசன் ஆசிரியர், ஒன்றிய துணை செயலர் அன்பழகன் , நடுவக்குறிச்சிஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரெனிஷ், இளைஞர் அணி அமைப்பாளர் சகாயடோம்னிக், துணை அமைப்பாளர்கள் தேவதாஸ், மைக்டைசன், மாணவர் அணி ராஜேஷ்குமார், துணை அமைப்பாளர் ஜோஸ்ப்பின் கிருபா, கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,


