கட்டாரிமங்கலம் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே நடராஜரின் பஞ்ச விக்கிர ஸ்தலமான கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூஜையையொட்டி ஸ்ரீவள்ளி. ஸ்ரீதெய்வானை, சமேத ஸ்ரீசுப்பிரமணியருக்கு காலை 10மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி மற்றும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூஜை ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் தலைமையில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.


