கோவில்பட்டியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்திட தூத்துக்குடி மாவட்ட வாட்ஸ்அப் எண் 6374810811 குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் வைத்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நர்சிங் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்,குழந்தை தொழிலாளர்முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்,குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்த புகார் அளித்திட தூத்துக்குடி மாவட்ட வாட்சப் எண் 6374810811 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கான துண்டு பிரசுரங்களும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகங்கள்,சுவரொட்டிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சொர்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சொர்ணா கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா வரவேற்றார். கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்திட தூத்துக்குடி மாவட்ட வாட்சப் எண் 6374810811 குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகங்கள், சுவரொட்டிகள் வழங்கி பேசினார்.இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம்,நர்சிங் கல்லூரி ஆசிரியைகள் மாலினி, தேவி, செல்வி, வினோதா,உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சொர்ணா கல்லூரி ஆசிரியை ஸ்ரீரங்கம்மாள் நன்றி கூறினார்.


