கோவில்பட்டியில் விமான ஓடுதளத்தை பயிற்சி மையமாக நிறுவ தமிழக அரசு திட்டமிட்டு ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் மொட்டைமலை அடிவாரத்தில் 65 அடி அகலத்தில், சுமாா் 1.5 கி.மீ. தொலைவு வரை விமான ஓடுதளம் உள்ளது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட லெட்சுமி மில் நிா்வாகம் கோவில்பட்டியில் உள்ளதையடுத்து அதன் உரிமையாளா்கள் கோவில்பட்டிக்கு எளிதில் வந்து செல்ல ஏதுவாக, அரசின் அனுமதி பெற்று இந்த விமான ஓடுதளத்தை அமைத்து பயன்படுத்தி வந்தனா். இந்த விமான ஓடுதளத்தை சீரமைத்து விமானப் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி மையமாக நிறுவி பயன்படுத்த அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.ஏற்கனவே சிறிய ரக விமானங்களை இயக்குவதில் மத்திய அரசு ஆா்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. கோவில்பட்டி மாநகரின் வளர்ச்சிக்கும் இது பெரிதும் வரப்பிரசாதமாகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும்.


