பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்ற ஒன்றிய செயற்குழு கூட்டம் வசவப்புரம் நேதாஜி நகர் சமுதாய நல கூட்டத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வக்கீல் செந்தில்@பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து ஆகியோர் தலைமையிலும் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பேச்சிமுத்து, மணிகண்டன் பொருளாளர் பால்துரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் திருமதி அமுதா கணேசன் அவர்கள் மற்றும் விவசாய அணி மாவட்ட தலைவர் திரு மருதையா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் திரு கிஷோர் குமார் ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், முருகன், பேச்சி, சுந்தர்ராஜ், வசந்த் ,சாமிநாதன், விநாயகப் பெருமாள், முத்து, தம்பான், ஜோதி, சிவசுப்பிரமணியன், சாந்தி ,முத்துஈஸ்வரி, செல்வி,சொர்ணம், ஜெயலக்ஷ்மி, சாந்தி, மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய அணி பிரிவினுடைய தலைவர்கள் கிளை தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகி ஆகியோர் திரளாக கலந்து கொண்டார்கள்

தீர்மானங்கள்
1) முறப்பநாடு தாமிரபரணி ஆற்று தடுப்பணை அருகில் குடிநீருக்கான உரைக் கிணறை சுற்றி உள்ள வெங்காய தாமரையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
2) மருதூர் மேலகால் முதலாம்குறிச்சி குளம் செல்லும் வழியில் உள்ள முள் புதர்களை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
3) மருதூர் கீழக்கால் 9 நம்பர் மடை புதிதாக கட்டித் தர வேண்டும்
4) தூத்துக்குடி முதல் திருநெல்வேலி செல்லும் இடைநிலை பேருந்துகளை உடனடியாக நிறுத்திவிட்டு 150 வழிதடத்தில் இயக்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
5) வல்லநாடு பேருந்து நிறுத்தத்து அருகில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்


