தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மெயின் பஜார் பகுதியில் மருதம் பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் அப்பகுதி முழுவதும் புங்கை மரங்கள் நடப்பட்டது. இந்த நிகழ்வின் போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் கலந்து கொண்டு மரங்களை நட்டனர். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


