சாத்தான்குளம் அருகே கடாட்சபுரம் பகுதியில் விவசாயிகள் போர்வெல் மூலம் தங்களது நிலத்திற்கு தண்ணீரை பாய்ச்சி அதன் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் குறைந்த வோல்டேஜ் மின்சாரம் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எந்தவித மோட்டார் உள்ளிட்ட இயந்திரங்களையும் இயக்க முடியாமல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென கண்ணில் கருப்பு துணிக்கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


