கோடை கால தூத்துக்குடி-மும்பை சிறப்பு இரயில் தாமதமாக காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் என்று இரயில்வே அறிவித்துள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு மத்திய இரயில்வே மும்பை-தூத்துக்குடி-மும்பை சிறப்பு இரயில் அறிவித்திருந்தது. இந்த ரயில் மும்பையில் இருந்து 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு இன்று காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தது. காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து தாமதமாகபுறப்படும் என்று இரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், இந்த இரயிலில் 7 முன்பதிவற்ற பெட்டிகள் இருப்பதால் சென்னை செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் தெரிவித்துள்ளார்.


