தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் ஒரு முக்கிய பயிராக உள்ளது. குறிப்பாக திருச்செந்தூர், திருவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் கருங்குளம் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் நெல் அதிகமாக பயிரிடுகிறார்கள். ஆனால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல், குறைவான மழை அளவு போன்ற காரணங்களாலும் சரியான விதைகளை தேர்வு செய்தலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் சராசரி விளைச்சலை பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். ரிலையன்ஸ் அறக்கட்டளை விவசாயிகளுக்கு நிலத்தை பண் படுத்துதல், மண் பரிசோதனை செய்தல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை, போன்ற தகவலைகளை தொடர்ந்து கொடுத்து விளைச்சலை அதிகரிக்கும் நோக்குடன் டிஜிட்டல் பண்ணைப்பள்ளி திட்டத்தினை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நெல் பயிரிடும் போது ஏற்படும் பிரச்சினைகளை கண்டறியும் விதமாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் பேய்குளம் மற்றும் மீரான்குளம் கிராமங்களில் இருந்து சுமார் 20 விவசாயிகள் கலந்து கொண்டனர். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடி தகவல் தேவைகளை கண்டறிந்தனர்.


