செய்துங்கநல்லூர் வியாபாரிகள் வர்த்தக சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. வியாபாரிகள் சங்க தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். செயலாளர் கனகராஜ் பூபாலராயர், பொருளாளர் ஆதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்சியில் செய்துங்கநல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் குருமாரியப்பன், வெண்ணிலா ஆறுமுகம், கிருஷ்ண சாமி , அப்துல் கனி, சாதிக் செல்வ விநாயகம், கணேசன், முனியன், ரமேஷ், கருப்பசாமி, சுந்தர் ராஜ், இப்ராகிம், நயினார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


