செய்துங்கநல்லூர் அருகில் உள்ள மிகவும் பழமையான ஆலயம் ஆழிகுடி வெங்கிடாசலபதி கோயில். இந்த கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. இந்த கோயிலை சிறமைக்க அறநிலைலயத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி இந்த கோயிலில் திருப்பணி துவங்கியது. இந்த கோயிலில் உள்ள இராமனுஜர், பெரிய ஆழ்வார், விஷ்ணு, கருடாழ்வார் உள்பட கல் சிலைகளை பலாலயம் செய்யும் பணி நடந்தது. பரிவார தெய்வங்களின் கற்சிலைகளை எடுத்து, திருப்பணிக்காக பத்திரப்படுத்து பணியை அறநிலையத் துறையினர் செய்தனர். தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) வெங்கடேசன், ஆழ்வார்திருநகரி நிர்வாக அதிகாரி அஜீத், கீழ வடக்கு திரு மாளிகை ராமனுஜம் சுவாமிகள், இன்ஸ்பெக்டர் சிவலோக நாயகி, சற்குணம், ராமனுஜம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆழிகுடி தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


