தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கூட்டுறவு துறை பதிவாளராக நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி இட மாற்றம் ரத்து செய்து மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்ற தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


