புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் சிறந்த மையமாக தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2023 கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இதில் சிறந்த மையமாக தூத்துக்குடி ஊரக ஒன்றியத்தில் பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட பள்ளியின் தலைமையாசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ், தன்னாரவலர் அன்ஷா மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


