பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 95.58 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 5வது இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஏப். 6 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 22,001 மாணவ, மாணவியர் எழுதினர். இந்நிலையில், தோ்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 21,029 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 10033 பேர் (93.31%), மாணவியர் 10,996 பேர் (97.75%) தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.58 சதவீதம் ஆகும். மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம், 5வது இடம் பிடித்துள்ளது.


