பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் 12கிராம் (22காரட்) தங்கம் மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு 2023ஆம் ஆண்டு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல். தொண்டு நிறுவனம் அரசு அங்கிராம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்
மேற்காணும் தகுதியுடையோர் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.06.2023க்கு விண்ணப்பம் செய்த பின் விண்ணப்பதாரர் தங்கள் புரிந்த சாதனைகள் குறித்த கருத்துவை 12.06.2023க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி தொலைப்பேசி எண்:0461-2325606 என்ற முகவரியில் நேரில் வந்து சமர்ப்பிக்கும்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


