தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் அருள்மிகு உச்சிமாகாளியம்மன் திருக்கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கருவேலமுள் மெத்தையில் அமர்ந்து சாமியாடி பக்தர்களுக்கு அருளாசியில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து அருளாசி பெற்றுச் சென்றனர்.


