குமரகுருபரசுவாமிகள் தொடக்கப்பள்ளி,ஸ்ரீவைகுண்டம்.15.05.2023 திங்கள் அன்று பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.தமிழக அரசின் கல்வி சார்ந்த திட்டங்கள்,பள்ளி மற்றும் மாணவர்களின் ஒழுக்கம், கல்வித்தரம் குறித்து பெற்றோர்களிடம் கலந்துரைடால் நடைபெற்றது. 2023-2024 கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உடற்பயிற்சி,ஆங்கில பேச்சுப்பயிற்சி, சிலம்பாட்டம்,யோகா வகுப்புகள், நன்னெறி வகுப்புகள் நடைபெற திட்டமிடப்பட்டது. பெற்றோர் ஆசிரியகழகத்தலைவர் தியாகச்செல்வன்,கல்வி புரவலர் ஓய்வு பெற்ற வட்டாரவளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சாரி, ஸ்ரீவை மக்கள் நலச்சங்கத்தலைவர் சந்துரு,பெற்றோர்கள்,மாணவர்கள், தலைமை ஆசிரியை,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி நலன்சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக மகிழ்வுடன் உறுதி அளித்தனர்.கூட்டம் இனிதே நிறைவுற்றது.????தலைமை ஆசிரியை.


