உலக அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு மலைப்பகுதியில் புதிய வகை பல்லினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் தேஜஸ் தாக்கரே தலைமையில் தாக்கரே வைல்டு லைவ் பவுண்டேசன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்உயிரினங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள வல்லநாடு மலைப்பகுதியிலும், கோவில்பட்டி அருகே உள்ள குருமலையில் உள்ள காப்புக்காடு பகுதியில் புதிய வகை பல்லியினம் கண்டுபிடிககப்பட்டுள்ளது.
இந்த மலைகளில் உள்ள புதர்கள் வாழ்விடங்களில் இருந்து புதிய வகை கெக்கோ ஹெமிடாக்டைலஸ் குவார்ட்சிடிகோலஸ் எனப்படும் பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கெக்கோவிற்கு ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட பொதுவான பெயர் குவார்ட்சைட் புரூக்லிஷ் கெக்கோ அல்லது தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோ ஆகும்.
இதை கண்டுபிடிகக மும்பை தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளையை சேர்ந்த அக்ஷய் கந்தேகர் தேஜஸ் தாக்கரே, சத்பால் கங்கல்மாலே, விவேக் வாகே, ஸ்வப்னில் பவார், இஷான் அகர்வால், நெல்லையை சேர்ந்த ஊர்வன பாதுகாப்பு ஆய்வாளர்கள் ராமேஸ்வரன் மாரியப்பன் ஆகியோர் அடங்குவர்.

இதுகுறித்து ஆய்வாளர் ராமேஸ்வரன் மலைமலர் நிருபரிடம் கூறியதாவது. தேஜஸ் தாக்கரே என்பவர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆவார். இவர் தலைமையில் ஐந்து ஆராய்ச்சியாளர்கள் குழு ஏப்ரல் மாதம் வல்லநாடு காப்புக்காடு மற்றும் குருமலை காப்புக்காடுகளில் தங்கள் ஆய்வின் போது நம்பமுடியாத, புரூக்லிஷ் ஹெமிடாக்டைலஸை கண்டறிந்துள்ளோம். இதற்காக ஜெய பார்வதி அம்மன் கோவில், வல்லநாடு காப்புக்காடு, மணக்கரை மற்றும் குருமலை காப்புக் காட்டில் உள்ள பெருமாள் கோவில் அருகே இந்த புதிய இனத்தினை கண்டுபிடித்தோம்.
இந்த புதிய பல்லியினங்கள் குவார்ட்சைட் புரூக்கிஷ் கெக்கோ -பல்வேறு அம்சங்களில் தனித்தன்மை வாய்ந்தது, முதுகுச் செதில்கள், முன்குளோகல்-தொடை துளைகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு, நடுப்பகுதியில் உள்ள முதுகு டியூபர்கிள் வரிசைகளின் எண்ணிக்கை, மனுஸ் மற்றும் பெஸ்களின் மற்றும் இலக்கத்தின் கீழ் உள்ள லேமல்லேகளின் எண்ணிக்கை கொண்டுள்ளது. இந்த புதிய இனங்கள் இந்திய ஹெமிடாக்டைலஸில் மிகவும் அடர்த்தியாக நிரம்பிய டியூபர்கிள்களைக் கொண்டுள்ளன. ஆசிரியர்களின் கூற்றுப்படி, தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோ இந்தியாவில் காணப்படும் ஹெமிடாக்டைலஸின் 53 வது இனமாகும், மேலும் தற்போது கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான ஏழாவது இனமாகும்.

இந்தியக் கதிர்வீச்சின் 37 ஹெமிடாக்டைலஸ் இனங்கள் இப்போது தீபகற்ப இந்தியாவில் மட்டுமே உள்ளன. இதில் 10 மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், இரண்டு கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும், 25 தீபகற்ப இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ளன. இந்த குழுவில் மூன்றாவது எழுத்தாளரான நான் (ராமேஸ்வரன்) காணும் போது வல்லநாடு மலையில் தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோக்கள் ஏராளமாக இருப்பதையும் குருமலையில் குறைவாகவே இருப்பதையும் கண்டறிந்துள்ளேன். என்று அவர் கூறினார்.
ராமேஸ்வரன் ஊர்வன ஆய்வாளர் ஆவார். இவர் பாம்புகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர். தமிழகத்தின் பாம்புகள் என்ற நூலை உலக தரத்தில் எழுதி வரும் நூல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே இந்த அபூர்வ வகை பல்லியினங்கள் கிடைத்து இருப்பது மாவட்டத்திற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.


