கருப்ப கவுண்டர் பழனிசாமி பிறப்பு: மே 12, 1954) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 7ஆவது முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார்.28 மார்ச் 2023 முதல் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். இவர் இ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார்.
இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோர் ஆவர். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்தார். இவர் இராதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மிதுன் என்னும் ஒரு மகன் உள்ளார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி அன்று உச்சநீதிமன்றம் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில், திருமதி சசிகலா உள்ளிட நால்வருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்புக்கூறிய நிலையில்,சசிகலா இவரை முதல்வராகவும் டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராகவும் நியமித்து சிறை சென்றார்.அதன் பின்னர் 2017 15 திகதி முதல்வராக பதவியேற்றார்.


