தூத்துக்குடியில் கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் “ஜவுளி வாங்குங்க சும்மா ஜாலியா கப்பலில் போங்க!” என்ற சிறப்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, தூத்துக்குடியில் தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. கே.சின்னத்துரை அன்கோவில் தற்போது யூனிபார்ம், திருமண விழாக்கள், போன்ற ஜவுளி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “ஜவுளி வாங்குங்க சும்மா ஜாலியா கப்பலில் போங்க!” என்ற சிறப்பு விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கே.சின்னத்துரை அன்கோ உரிமையாளர் அரிராமகிருஷ்ணன் கூறுகையில், “கோடை கால விடுமுறையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக “ஜவுளி வாங்குங்க சும்மா ஜாலியா கப்பலில் போங்க!” என்ற சிறப்பு விற்பனை அறிமுகம் செய்துள்ளாம். இந்த சிறப்பு விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி ரூ.3ஆயிரத்திற்கு மேல் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும். குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கும் 100பேர்கள் தன்னுடன் ஒரு நபருடன் வங்கக் கடலில் கோர்டெலியா கப்பலில் இன்பச்சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.


