செய்துங்நல்லூர் தொழில் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்க தலைவராக ஐயப்பனும், இணை தலைவராக செல்வ விநாயகமும், துணை தலைவர்களாக குரு மாரியப்பன், உதயகுமாரும், அதேபோல் செயலாளராக கனகராஜ் ராயரும், இணை செயலாளராக வெண்ணிலா ஆறுமுகமும், துணைச்செயலாளராக நவாப், கணபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து பொருளாளராக ஆதாமும், துணை பொருளாளராக அப்துல்கனியும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். கௌரவ தலைவர்களாக ஐயாகுட்டி, மந்திரம்பிள்ளை, சுடலைமணி, பொன்பாண்டியும், கவுரவ ஆலோசகர்களாக பால்சாமி, ஆவுடையப்பன், முருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தின் முடிவில் செய்துங்கநல்லூர் பகுதியைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொறுத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளையை சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.


