தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தில் ரேசன் கடையின் மேற்கூரை மற்றும் கட்டிட சுவர்கள் பழுதாகிய நிலையில் மாற்று கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் தங்களுக்கு புதிய ரேசன் கடை கட்டித்தந்திட வேண்டும் என்று ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசிஅமிர்தராஜிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15லட்சம் திட்டமதிப்பில் புதிய ரேசன் கடை கட்டுவதற்கு அனுமதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து புதிய ரேசன் கடை கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ரேசன் கடை கட்டுமானப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர், கருங்குளம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்ஹரீம், மாவட்ட துணை தலைவர் சங்கர், காங்கிரஸ் வட்டார தலைவர் புங்கன், நகர தலைவர் கருப்பசாமி, நிர்வாகிகள் சிங்கப்பன், எடிசன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.


