திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் தொல்லியல் மாணவர்கள் ஒரு நாள் ஆதிச்சநல்லூரில் கள ஆய்வு மேற்கொண்டனர். முனைவர் ரவி தலைமையில் 30க்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த குழுவில் இடம் பெற்றனர். இவர்கள் காலையில் ஆதிச்சநல்லூரில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ் குமார் மாணவர்களுக்கு ஆதிச்சநல்லூர் குறித்துப் பேசினார். தொடர்ந்து மலையரசி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் மனோண்மணியம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் கழக இயக்குனர் முனைவர் சுதாகர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதன்பின்பு மாணவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆதிச்சநல்லூரில் அவர்கள் சேகரித்த பொருள்கள் குறித்து அவ்விடத்தில் வைத்து ஆய்வு செய்தனர்.


