மும்பை லேக் ரோட்டில் உள்ள செந்தூர் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் காலந்தேர் வெளியீட்டு விழா இன்று மாலை மும்பை முலுண்ட் வித்யாமந்திரில் நடைபெறுகிறது.
இதில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த தாமிரபரணி மற்றும் ஆதிச்சநல்லூர் குறித்து அதிக புத்தகங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இதற்காக இன்று காலை அவர் மும்பை சென்றார். அங்கு அவருக்கு செந்தூர் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் தலைவர் செந்தூர் நாகராஜன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருடன் விழா ஒருங்கிணைப்பாளர் மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


