தூத்துக்குடியில் வருகிற 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் அமைச்சர் பெ.கீதாஜீவன், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் 07.04.2023 அன்று காலை 10 மணிக்கும் மற்றும் மாநகராட்சி 32வது வார்டு பகுதியில் மாலை 5.30 மணிக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 08.04.2023 அன்று காலை 10.30 மணிக்கும், மாநகராட்சி 18வது வார்டு பகுதியில் மாலை 5.30 மணிக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சின்னமணி நகர் பூங்கா அருகில் 09.04.2023 அன்று காலை 10.30 மணிக்கு ஆவின் பாலகத்தினை சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் திறந்து வைக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து மாநகராட்சி 19வது வார்டு பகுதியில் மாலை 5.30 மணிக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


