தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகளுக்கான ஆசிரியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மே1 முதல் கோடைக்கால ஹிந்து சமய பண்பாட்டு வகுப்புகள் துவங்க இருப்பதால் அதற்கான ஆசிரியர் பயிற்சி முகாம் தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பூங்கொடி பண்பாட்டு வகுப்பு புத்தகத்தினை வெளிட்டார். சரவணாஸ் ஹோட்டல் செந்தில் தம்பதிகள் பெற்றுக்கொண்டனர்.
பாடல் குறுந்தகட்டினை இமயம் சகோதரிகள் வெளியிட கல்லூரி பேராசிரியர் தேவராஜ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் இசக்கியப்பன், சேவாபாரதி மாநில செயலாளர் வெண்ணிமாலை, மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


