ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்தியாவின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. ஆனால் வெளிநாட்டிலிருந்து நிதி வாங்கிக்கொண்டு உள்ளூர் மக்களை நிறுவனத்திற்கு எதிராக தூண்டி விட்டு போராட்டம் நடத்தி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி விட்டார்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக ஆளுநரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனர்.


