திருவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் சிவன்கோவில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அருள்மிகு குலசேகரநாயகி உடனான மார்த்தாண்டேஸ்வரர் என்ற சிவாலயம் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு தொடங்கி பிரதோஷ பூஜையின் போது கலசபூஜை, 1008 சங்கா பூஜை மற்றும் திருமுறை பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் 7.15 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மகா சிவராத்திரி விழாவின் முதல் கால பூஜை இரவு 8 மணிக்கு தொடங்கியது. அப்போது
சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு திரவ்ய அபிஷேகம்,1008 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதேபோன்று, இரவு11.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 2 மணிக்கு மூன்றாம்கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு நான்காம்கால பூஜையும் சிறப்பாக நடைபெற்றது. இந்த 4 கால பூஜைகளிலும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அர்த்தசாம பள்ளியறை பூஜை, சண்டேச பூஜை, பைரவர் அபிஷேகம் பூஜைகள் நடந்தது. தொடர்ச்சியாக திருவனந்தல், உதய மார்த்தாண்ட தரிசனத்துடன் சிவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்றது.


