தினமணியோடு தனக்கு உண்டான தொடர்ப்பை எம்.ஜி.ஆர். பல்கலைகழக துணை வேந்தர் சுதா சேசய்யன் பகிர்ந்து கொண்டது.
வாரம் தவறினாலும், தலையங்கப் பக்கத்திற்காகக் கட்டுரை வாங்கிக் கொள்வது மட்டும் ஆர்.எம்.டி.எஸ்ஸிடம் தவறவே தவறாது. சில கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. சில பிரசுரிக்கப் படவில்லை. அதற்கும் அவரிடம் காரணம் இருந்தது: ‘நீ கொடுத்ததெல்லாம் வைத்திருக்கிறேன். தக்க நேரம் வரும்பொழுது போடுவேன்.’ என்று கூறுவார்.
தினமணியின் வலிமைக்கு அவ்வப்போது வெளியாகும் மலர்கள் பெருமை சேர்க்கின்றன.
மாலன் காலத்தில் வேலூரில் நடந்த நிகழ்ச்சி, ஆர் எம் டி எஸ் காலத்தில் நடைபெற்ற இலக்கிய விழா என்று பலவற்றிலும் பங்கு பெறும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியுள்ளது. வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் இக்காலத்தில், தினமணியின் வேகம் அதிகரித்து விட்டது. இளைஞர்மணி, மகளிர் மணி, வெள்ளிமணி என்று ஒய்யாரமாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது; வண்ண ஜாலம் காட்டுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தவறினாலும், தமிழ்மணியையும் கலாரசிகனையும் வாசிக்கத் தவறுவதில்லை. கலாரசிகனின் விமர்சனமும் பாராட்டும், சர்வதேச அளவில் தமிழ் ஆர்வலர்களால் உற்று நோக்கப்படுகின்றன. இதனா லேயே, என்னுடைய நூல் ஒன்று வெளியாகும்பொழுது, அந்த நூல் குறித்துக் கலாரசிகனின் பதிவு என்ன என்று நானும் எதிர்ப்பார்ப்பது வழக்கம். தினமணிப் பதிவு வெளியானவுடன், பேரறிஞர் பெருமக்கள் சிலர், குறிப்பிட்ட நூலைத் தேடிப் பிடித்து வாசிப்பதை நான் அனுபவத்தில் அறிவேன்.
இவ்வளவு என்ன? திங்கள்கிழமைதோறும் வெளியாகிற நூல் அரங்கப் பகுதியை அலசி, அதிலிருந்து தேவையான நூல்களைப் பட்டியலிட்டுக் கொண்டு, அந்த வாரமே அவற்றை வாங்குகிற பழக்கம் எனக்கும் உண்டு.
டிசம்பர் மாத இசைவிழாக் காலங்களில், சூழல் நெருக்கத்தால் போக முடியாத கச்சேரிகளை, தினமணியின் விமரிசனத்தையும் ஒளிப்படங்களையும் வைத்துக் கொண்டு எட்டிப் பார்த்த திருப்தியையும் பெறுவதுண்டு.
தினமணி என்னுடைய அன்றாட வாழ்க்கையின் அங்கம். செய்திகளை வாசிப்பது என்பது மட்டுமில்லை, உண்மையான நடப்பு என்ன என்பதையும் முறையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
தகவல், அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், இளைஞர் நலம், மகளிர் பங்களிப்பு, சுய முன்னேற்றம், புத்தக வாசிப்பு, மொழிச் செம்மை, ஆன்மீகம், சிறுவர் இலக்கியம், வெகு ஜனத் திருப்தி என்று இதழியலின் எந்த அங்கத்தையும் விட்டுவிடாமல், மேலும் மேலும் செம்மைப்படுத்திக் கொண்டிருப்பதில் தினமணியின் பங்கு பாராட்டுக்குரியது. என்றுஅவர் எழுதிய கட்டுரையில் காணப்பட்டது.
மற்றொரு கட்டுரையில் சுதாசேசய்யன் நடராஜரை பற்றி எழுதியிருப்பார்.
நடராஜர்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஹீரோ!”- நெகிழ்கிறார் சுதா சேஷய்யன். அறிவியலும் ஆன்மிகமும் கலந்த ஆளுமை, சுதா சேஷய்யன். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் என இரண்டு முகங்கள் கொண்டவர். இரண்டுமே அவருக்குப் பெருமிதம் தருபவை. சிதம்பரம் நடராஜர் மீது தீரா பக்தி கொண்டவர், சுதா சேஷய்யன்.
அறிவியலும் ஆன்மிகமும் கலந்த ஆளுமை, சுதா சேஷய்யன். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் என இரண்டு முகங்கள் கொண்டவர். இரண்டுமே அவருக்குப் பெருமிதம் தருபவை. சிதம்பரம் நடராஜர் மீது தீரா பக்தி கொண்டவர், சுதா சேஷய்யன். நடராஜர் பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர். “எனக்குச் சிறிய வயதிலிருந்தே பக்தி அதிகம். காரணம் நான் வளர்ந்த சூழல். என் அம்மாவும் சரி, பெரியம்மாவும் சரி எப்போதும் தேவாரம், திருவாசகப் பாடல்களை மெல்லிய குரலில் பாடிக்கொண்டே இருப்பார்கள். தோட்டத்திலுள்ள பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போதும், சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் போதும், வேறு எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடியபடியே இருப்பார்கள். அவர்கள் பாடியதைக் கேட்டே வளர்ந்ததால், என் மனதிலும் தேவாரமும் திருவாசகமும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டன. அவர்கள் அடிக்கடி பாடுவது, ‘தை மாதத்தில் குரு பூசத்தில்’ என்ற பாடலைத்தான்.
சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்க வாசகர் மற்றும் நாயன்மார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், அவர்களுக்குச் சிவபெருமான் அருள் கிடைத்ததையும் என் தந்தை சுவைபட எனக்குச் சொல்லுவார். அவர் சொன்ன சிவபுராணக் கதைகள் என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒருமுறை சிதம்பரம் சென்றிருந்தோம். தில்லை நடராஜரைப் பார்த்த உடனே என் மனதில் இனம் தெரியாத ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அப்போதிருந்து பள்ளிக்கூட பாடங்களை எழுதுவதற்கும், படங்கள் வரைவதற்கும் ‘நடராஜ் கம்பெனி’யின் ஹெச்.பி பென்சிலைத்தான் கையில் வைத்திருப்பேன். வீட்டில் வேறு நிறுவனங்களின் பென்சில்கள் இருந்தாலும் சரி, பென்சில் வாங்க கடைகளுக்குப் போகும்போதும் சரி வேறு பென்சில்கள் கொடுத்தால் அவற்றை வாங்கவும் மாட்டேன். பயன்படுத்தவும் மாட்டேன். நடராஜர் ஹெச்.பி. பென்சில் என்னுடன் இருந்தால், நடராஜரே என்னுடன் பாதுகாப்பாக இருப்பது போன்று ஒரு நம்பிக்கை.
(நதி வற்றாமல் ஓடும்)


