விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சனிபிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சிவராத்திரி சனிபிரதோஷத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், முருகன்,மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் நந்தி சிலைக்கு செவ்வரளி, எருக்கம், செவ்வந்தி, அருகம்புல் ஆகியவற்றாலான மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து சிவபெருமான் பார்வதி சிலையை பக்தர்கள் தூக்கிக்கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் திருத்தலத்தினை ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் என்று கூறியவாறே 3 முறை சுத்தி வந்தனர்.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு இளநீர்,பன்னீர், சந்தனம், தேன், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


