செய்துங்கநல்லூரில் ஹிந்துஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 6 ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் ஹிந்துஸ்தான் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 6 ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள மைதானத்தில் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மாரியப்பன், சுடலைமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் பரிசை செய்துங்கநல்லூர் இந்துஸ்தான் வாரியர்ஸ் அணியும், இரண்டாம் பரிசை வல்லநாடு ரெட் விங்ஸ் அணியும், மூன்றாம் பரிசை நாட்டார்குளம் எம்என்கே பாய்ஸ் அணியும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்வத் அகமது கபீர், அருள், பசீர் இம்ரான், லெடசுமணன், வழக்கறிஞர் கோதர் ஆகியோர் செய்திருந்தனர்.


