தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் தெற்கு காசேரியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது விவரம் பின்வருமாறு நெல்லையிலிருந்து ராமானுஜம் புதூர் மற்றும் அரச குளம் கிராமங்களுக்கு தெற்கு காரசேரி வழியாக அரசு நகர பேருந்துகள் வந்து செல்கின்றன இந்த பேருந்துகளில் தான் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் மற்றும் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அரசு மருத்துவமனை வங்கிகளுக்கு தினசரி கூலி வேலைகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த நகர பேருந்துகளில் தான் சென்று வருவது வழக்கம்

சமீப காலமாக இந்த நகரப் பேருந்துகள் முறையாக இயங்குவதில்லை இதனால் காலையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மாலை நேரத்தில் வீடுகளுக்கு திரும்பி வருவதற்கு பேருந்து முறையாக வராததால் காட்டுப் பகுதி வழியாக தான் நடந்து வர சூழ்நிலை உள்ளது சில நேரங்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களிலும் வரும் சூழ்நிலை உள்ளது ஆகவே நமது சங்கத்தின் தெற்கு காசேரி கிளை சார்பில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மேற்படி நகர பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி கோரிக்கை மனு பொதுமக்கள் கையெழுத்துடன் அனுப்பப்பட்டது



