இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர் நங்கமுத்து தலைமையிலும் ,மாவட்ட செயலாளர் வழக்கில் பிரபு முன்னிலையிலும் மாவட்ட சிறப்பு விருந்தினர்வர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் போஸ், மாவட்ட பொருளாளர் கணேஷ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த செயற்குழு கூட்டத்தில் ஒன்றியத்தைச் சார்ந்த 194 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
கூட்டத்திற்கு வரவேற்புரை மாவட்ட மகளிர் அணி துணை தலைவி ஜெயலக்ஷ்மியும் தலைமை உரை ஒன்றிய தலைவர் நங்கமுத்து அவர்களும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் கட்சியின் அமைப்பு ரீதியான செயல்திட்டங்கள் பற்றி மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபுவும், மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி ஒன்றிய பொதுச் செயலாளர் மணிகண்டனும் ஒன்றியத்தினுடைய தீர்மானங்கள் பற்றி ஒன்றிய பொதுச்செயலாளர் பேச்சு முத்துவும், நன்றி உரை ஒன்றிய பொருளாளர் பால்துரையும் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவசாய அணி மாவட்ட செயலாளர் பேச்சி, பட்டியலினி மாவட்ட பொதுச் செயலாளர் அந்தோணி ராஜ், மகளிர் அணி மாவட்டத் துணைத் தலைவர் ஜெயலக்ஷ்மி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காஞ்சனாதேவி, முத்து, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டச் செயலாளர் முருகன், ஊடகப்பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சீனிவாசன், மகளிர் அணி ஒன்றிய தலைவி சாந்தி, ஒன்றிய துணைத் தலைவி கலா, கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் விநாயகப் பெருமான், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் சாமிநாதன், தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் ஜோதி, விவசாய அணி ஒன்றிய திட்ட பொறுப்பாளர் பேச்சி ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்
செயற்குழு கூட்டத்தில் மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் ,ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள், கிளை தலைவர்கள் ,ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டார்கள்.
முறப்பநாடு பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டார்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து ஊர் பொதுமக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது
ஒன்றியத்தினுடைய தீர்மானங்கள் விபரம்
1)கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும்
2) தூத்துக்குடி முதல் திருநெல்வேலி வரை இரு மார்க்கத்திலும் செல்லக்கூடிய இடைநில்லா பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும்
அந்தப் பேருந்துகள் அனைத்தும் 150 பேருந்துகளாக இயக்கி வசவபுரம், முறப்பநாடு, வல்லநாடு, தெய்வச்செயல்புரம், வாகைகுளம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
போக்குவரத்து துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பொதுமக்களைத் திரட்டி போராட்ட நடத்தப்படும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


