ஓட்டப்பிடாரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஓட்டப்பிடாரம் வ.உ.சி. விளையாட்டுக்கழகத்தின் 35ம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டி ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களுக்கு 10 கி.மீ, மாணவிகளுக்கு 5 கி.மீ, 6ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 2 கி.மீ துாரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டிக்கு வ.உ.சி விளையாட்டுக் கழக தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் யோகராஜ், ஒருங்கிணைப்பாளர் பெரியமோகன், ஆலோசகர் தமிழாசிரியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுக் கழக நிறுவனர் லெனின் வரவேற்றார்.
போட்டியை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் துவக்கி வைத்தார். இதில், முதல் 3 பரிசுகளையும் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மனோஜ்குமார், முகேஷ், முத்துமுனியாண்டி ஆகியோர் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு வெள்ளி பரிசுப் பொருட்களை சிலோன்காலனி கே.பி.கே கான்ட்ராக்டர்ஸ், முப்புலிவெட்டி பால் கூட்டுறவு சங்கத் தலைவர் முத்துவேல், ராஜாவின்கோவில் பஞ்., தலைவர் அன்புராஜ் ஆகியோர் வழங்கினர்.
மாணவிகள் போட்டியில் முதல் பரிசை புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா, 2வது பரிசை புதுார் இந்து நாடார் பள்ளி மாணவி சங்கீதா, 3வது இடத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவி கனகலட்சுமி ஆகியோர் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளர் மாடசாமி(எ) பெரிய மோகன், ஓட்டப்பிடாரம் மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத் தலைவர் எல்.கே.முருகன், தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் பழனிச்சாமி ஆகியோர் வெள்ளி பரிசுப் பொருட்களை வழங்கினர்.
2 கி.மீ., துார பள்ளி போட்டியில் மாணவர்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவர் முருகேஸ்வரன் முதல் பரிசையும், முப்புலிவெட்டி பஞ்., யூனியன் பள்ளி மாணவர் கனிஷ்டா முகுந்த் 2ம் பரிசையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் பள்ளி மாணவர் வெற்றிவேல் 3ம் பரிசையும் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கப்பிகுளம் அ.தி.மு.க., யூனியன் கவுன்சிலர் அரிச்சந்திரன் பரிசு வழங்கினார்.
மாணவியர்களுக்கான போட்டியில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் பள்ளி மாணவி கனிஸ்கா முதல் பரிசையும், புதுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சங்கரேஸ்வரி 2ம் பரிசையும், உதயதர்ஷினி 3வது பரிசையும் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கொல்லங்கிணறு ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில் ஓட்டப்பிடாரம் வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை மேரி, ஆசிரியர் கள்ளாண்ட பெருமாள், உடற்கல்வி ஆசிரியை மெர்லின் ஜெனி, குறுக்குச்சாலை உடற்கல்வி இயக்குனர் கேபா ரோசாரியா, உடற்கல்வி ஆசிரியர்கள் சில்லாங்குளம் முத்துகருப்பன் பள்ளியைச் சேர்ந்த மாரிமுத்து, முத்துராஜ், கீழமுடிமன் கிருஷ்ணன், புதியம்புத்துார் பிரசன்னா பள்ளி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வ.உ.சி., விளையாட்டுக் கழக செயற்குழு தலைவர் டாஸ்மாக் சண்முகராஜ் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை வ.உ.சி., விளையாட்டுக் கழக இணைச் செயலாளர்கள் வேல்முருகன், புகழும் பெருமாள், துணை செயலாளர் கனகராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


