திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறை சுயநிதி பிரிவு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் இணைந்து நடத்தும் “அகழாய்வில் அகழ்ந்த ஆதித்தமிழர் வாழ்வியல்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நாளை 10.02.2023 காலை 10 மணிக்கு தெற்கு கள்ளிகுளம் கல்லூரி டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. கல்லூரி செயலர் , தாளாளர் வி.பி. ராமநாதன் நாடார் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் மேஜர் டி ராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெறும் கருத்தரங்கில் மயிலாடும் பாறை குறித்து திருநெல்வேலி அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அவர்களும், ஆதிச்சநல்லூர் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களும் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு துறைத்தலைவர் கிரிஜா, ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் முருகவேல் உள்பட தமிழ்த்துறை சுயநிதி பிரிவினர் செய்து வருகிறார்கள்.


